துன்பங்களை இறைவன் அனுமதிப்பது ஏன்?

 


ஒவ்வொரு துன்பங்களையும் இறைவன் அனுமதிப்பது நம்மை பாவ நிலையிலிருந்து திருத்துவதற்க்காக மட்டுமே.இறைவனிடமிருந்து அருளை ,பாவிகள் ஒரு போதும் பெற்றுக்கொள்ளமுடியததால் துனபங்களை அனுமதிப்பதன் மூலம் எல்லாம் என்னால் முடியும் என்ற மனிதனின் மனநிலை தகர்க்கப்பட்டு தாழ்த்தபடுகிறான், கடவுளை தேடுகிறான்.மனமாற்றமடைய தூண்டுப்பட்டு பாவ வாழ்க்கையை விடவும் துன்பங்களை கடவுள் பயன்படுத்துகிறார்.

ஒருசில பாவிகள் தங்கள் பாவ வாழக்கையை முற்றிலும் விடாமல் செய்யப்படும் புண்ணிய முயற்சிகளான தானம், தர்மம் எதுவும் இறைவனை அடையாமல் பாவியின் மனமாற்றத்திற்கு மட்டுமே உதவுகிறது.எனவே பாவ நிலையிலிருந்து ஒருவனை மீட்பதற்கு துன்பவங்களை அனுமதிப்பது இறைவனுக்கு அவசியமாயிருக்கிறது.

எனவே துன்பங்கள் வரும்போது கடவுளே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்குற என்று கடவுளை பழிப்பவர்களே ஒன்றாய் நன்றாய் புரிந்துக்கொள்ளுங்கள் .கடவுளால் நல்லவர்களுக்கு ஒரு போதும் தீமை செய்யமுடியவே முடியாது.

மனம்திருந்தியப்பின் பாவ வாழ்க்கையை விட்டப்பின்னரும் தொடரும் துன்பங்கள் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு தண்டனையாக மனமுவந்து ஏற்றுக்கொண்டு செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொள்ளும் போதுதான் துன்பங்கள் அருள் வரங்களை பெற்றுத்தரும் ஆசீர்வாதங்களாக மாறும்.துன்பமே இறைவன் நம்மை மனமாற்றமடையச்செய்யும் சுலபமான வழி.நாமும் அவரை உணர்ந்துக்கொள்வதற்கான கருணை தான் துன்பம்.

உலகத்தை அச்சுறுத்திய கொரோனா நோயும் ,அச்சுறுத்தப்போகும் உலகப் போரும் ,கடவுளை பகைத்து பாவ வாழ்க்கை வாழும் நாம் மனதிரும்பாத வரை முடிவுக்கு வரப்போவதில்லை.

கடவுளை நேசி .உன்னை நேசிப்பதுப்போல அயலாரையும் நேசி!.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க !

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!