என் வெற்றி என் குருக்களிடமிருந்தே ஆரம்பமாகும் - தேவமாதா



தேவமாதா தன் பிள்ளைகளாகிய குருக்களுக்கு வழங்கிய செய்தி.


என் தனி அன்புக்குரிய பிள்ளைகள்,குருக்கள்.ஏனெனில் அவர்களுடைய தேவ அழைத்தலினால் அவர்கள் இயேசுவாக இருக்கும்படி அழைப்பு பெற்றிருக்கிறார்கள்.அவர்களை என் குமாரனின் சாயலில் உருவாக்கும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.அவர்களை நான் ஒரு போதும் கைவிடுவதில்லை.அவர்களை ஒரு போதும் தனியே விட்டுவிடுவதில்லை.அவர்கள் தங்கள் குற்றங்களைக் கண்டும்,தவறுகளை முன்னிட்டும்,தாங்கள் மிகவும் பலமற்றவர்களாயிருப்பதாலும் மனந்தளர்ந்துப்போக வேண்டாம்.நானொரு தாய்.என் மிகச்சிறந்த மகிழ்ச்சி மன்னிப்பது தான்.ஏனெனில் மன்னித்தப்பின் அதற்கும் மேலான அன்பை அவர்களுக்கு காட்ட முடியும்.


என்னுடைய இப்பிள்ளைகள்(குருக்கள்) தங்களை முழுவதும் என்னிடம் ஒப்படைக்க பயப்படவேக்கூடாது.இப்பொழுது பெருங்குழப்பமான காலங்களில் வாழ்கிறார்கள்.பலரிடத்தில் என் குமாரன் மீதுள்ள விசுவாசமும் என்மேலுள்ள நம்பிக்கையையும் குறைந்து வருகின்றன.பலர் நன்மாதிரிகை காட்டுவதில்லை.எத்தனை குருக்கள் தைரியமிழந்துப்போகிறார்கள்.என்னை நோக்கி கூப்பிட வேண்டிய சமயம் இதுவே.என்னைத்தேட வேண்டியத் தருணம் இதுவே.என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தவே நான் காத்திருக்கிறேன்.


சிறு குழந்தைகளைப்போல கூப்பிட்டு அழுவதைக் கேட்பது என் இதயத்தை மிக அதிகமாகத் தொட்டுவிடுகிறது.தன் சிறு குழந்தை அழுவதைக் கேட்டு உருகாமலிருக்க ஒரு தாயால் கூடுமா?


இதே பாருங்கள் எல்லாமே உடைந்து நொருங்கிப் போனப்பின் என் பிள்ளைகளின் கண்ணீரின் பலம் ஒன்றே எஞ்சி நிற்கும்.அது ஒரு ஆச்சரியமான உக்கிரமான முறையில் நான் தலையிட என்னை வற்புறுத்தும்.என் தெரிந்தெடுக்கபட்ட பிள்ளைகளாகிய  என் குரு மகன்களிடம் என் வெற்றி ஆரம்பிக்கும்.


மேலும் மேலும் பெரிதான காரியங்களை  காண நீங்கள் பழகிக்கொள்ளுங்கள்.ஏனெனில் என் மாசற்ற இருதயம் இரக்கமும் மன்னிப்பும் வற்றிப்போக முடியாமல் உற்பத்தியாகும் இடமாக இருக்கின்றது.இந்நெருப்பின் உக்கிரத்தை தடைபோட்டு நிறுத்த இயலவில்லை.சீக்கிரமே உலகின் மீது என் எளிய பிள்ளைகளின் சார்பாக இரக்கம் மன்னிப்பு என்னும் பிரவாகங்கள் பாயந்தோடி வரும்.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!