போர்களும் கொள்ளை நோய்களும் ஏன் கடவுள் அனுமதிக்கிறார் ? தடுக்க அர்ச்.ஜான் போஸ்கோவின் தீர்க்கதரிசனம்
பாவம் நிரம்பிய மனுகுலத்தை கடவுள் போர்களினாலும் கொள்ளை நோய்களாலும் பசி பட்டினியாலும் தண்டித்து சுத்திகரிப்பார்.
இந்த தண்டனைகள் உலகெங்கும் நடைபெறுவதை அன்றாட செய்தியாக நாம் அறிந்து வருகிறோம்.
பாவமும் பாவத்துக்குரிய தண்டனையும்! பாவத்தால் விரோதித்து அலட்சியம் செய்யப்படும் கடவுளின் நீதியின் கரம் ! யாரால் தாங்க முடியும்.பாவப்பரிகாரம் ஒன்றே அதற்கு மாற்று .நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய ஒருப்போதும் பிந்திப் போகாது.அது பலனளிக்கவும் தவறாது.நாம் இன்னும் இப்பொழுதுக்கூட பரிகாரம் செய்யலாம். *பரிகாரம் செய்ய அர்ச்.ஜான் போஸ்கோவின் தீர்க்கதரிசனத்திலேயே அழைப்பு விடுக்கப்படுகிறது.*
*"ஓ குருக்களே! நீங்கள் தேவாலய மண்டபத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவில் நின்று ஏன் கதறி அழவில்லை? இந்த தண்டனைகள் நிறுத்தும்படி ஏன் மன்றாடவில்லை? விசுவாசக் கேடயத்தை கையிலெடுத்த கூரைகளின் மீதேறி கூவிச் சொல்லாதிருப்பதேன்? என்னுடைய வார்த்தையாகிய விதையை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கும் தெருக்களுக்கும்,எட்டமுடியாத இடங்களுக்கும் சென்று போதிக்காததேன்?
என் வார்த்தை இரு பக்கமும் கருக்குள்ள வாள் என்றும் என் எதிரிகளைத் தோற்கடிக்கும் என்றும் மனிதருக்கெதிரான கடவுளின் கோபத்தைத் தணிக்கும் என்றும் அறியீர்களோ?
இவை தடுக்க முடியாதபடி ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும்.மிக மெல்ல அவை வரும்.ஆனால் மகிமைப்பொருந்திய மோட்ச அரசி அங்கிருக்கிறார்கள்.அண்டவருடைய வலிமை அவர்கள் கரத்திலிருக்கிறது. மேகங்களைப் போல் அவர்கள் தன் எதிரிகளைச் சிதறடிப்பார்கள்.அவர்கள் முதுமையடைந்த வணக்கத்திற்குரிய மனிதனை அவருடைய முந்திய எல்லா வழிபாட்டு வஸ்திரங்களாலும் உடுத்துவிப்பார்கள்.
*விளக்கம்*
இங்கே, குருக்கள் மன்றாடினால் வாதைகள் நிறுத்தப்படும் என்ற கருத்து மிகத்தெளிவாக துலங்குகிறது.பழைய ஏற்பாட்டிலே பல தடவைகள் அப்படி நடந்துள்ளது.சர்வேசுரனின் சித்தம் அப்படியே இருக்கிறது.நம் குருக்கள் நம்மை காப்பாற்றமுடியும்.அவர்கள் ஏன் மன்றாடவில்லை என்று ஒரு அன்பான கடிந்துக்கொள்ளுதல் இத்தீர்க்கதரிசனத்தில் காணப்படுகிறது.இன்னும் சொற்பகாலம் இருக்கிறது.அதை நாம் தீவிரமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பரிகாரம் செய்ய வேண்டும்.*நம் குருக்கள் பங்குகள் தோறும் முதல் சனி பரிதாரப் பக்தி முயற்சியை நடத்த வேண்டும்.*
தீர்க்கதரிசன நிகழ்ச்சிகள் எப்படியும் நடக்கும் ஆயினும் அவை மோட்ச இராக்கினியான மாதாவுக்கு கட்டுப்பட்டவையே ஏனென்றால் அவர்களிடம் ஆண்டவரின் வல்லமை இருக்கின்றது.நம் மனந்திரும்புதலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.நாம் மட்டும் அவர்களின் விருப்பத்தை நிறைவெற்றினால் நம் எதிரிகளை,காற்று மேகங்களை போல சிதறடிப்பார்கள்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment