செயலில்லாத விசுவாசம் செத்த விசுவாசம்.
"புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவிப் பெறுக"
இந்த பாடல் வரிகள்,
திவ்விய நற்கருணை ஆண்டவரை
பேழையில் வைத்து ஆராதிக்க மட்டுமல்ல,
நம்மிடம் சுதனாகிய சர்வேசுரன் நற்கருணையாக வரும்போது
எந்த விசுவாசத்தோடு அவரை ஏற்றுக்கொண்டு உட்கொள்கிறோம் என்பதே முக்கியம்.
முக்கவசம் போட்டு அவரை பெறுவது,
கையுறைகளை அணிந்துக் கொண்டு அவனைத்தொடுவது,அவரது திருஉடலைத் தொட்ட கரங்களை கிருமிநாசினியால் கழுவுவது,
கையில் கொடுத்தால் மட்டுமே நோய்பராவாது என்று நாவில் தர மறுப்பது.
இப்பேற்பட்ட அவிசுவாச செயல்கள் திவ்விய நற்கருணை ஆண்டவரல்ல என மறுதலிக்கும் விதமாக செய்யப்படும் அவசங்கைகளே.
"புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவிப் பெறுக"
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment