இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-8
மனுக்குலம் தன் சொந்த கரத்தால் தன் மீதே கொண்டு வரக்கூடிய அழிவின் விளிம்பில் வந்து நிற்கிறது.உங்களுடைய இக்காலத்தின் இறுதி முடிவைப் பற்றி நான் பாத்திமாவில் முன்னுரைத்தது இதோ தொடங்கிவிட்டது.
கடவுளுக்கெதிராய் பிடிவாதமான எதிர்ப்பின் பாதையில் மனுக்குலம் அடைந்துள்ள துன்மார்க்கம் நாளுக்குநாள் ஆழமாகிக்கொண்டிருக்கும் போது,தேவ நீதியின் கரத்தை தடுத்து நிறுத்த இனிமேலும் என்னால் எப்படிக் கூடும்? எத்தனை நாடுகள் இதனால் பாதிக்கப்படும் ! எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள்! மேலும் பலர் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்க நேரிடுமே ...பஞ்சம்,நெருப்பு,மகா பெரிய நாசம் இவையே மனுக்குலத்தை தாக்கவிருக்கும் தண்டணையை உங்களுக்கு கொண்டு வரப்போகின்றவை.
என் அருமை மகன்களே!
என் அவசர வேண்டுகோளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளுங்கள்.ஏனென்றால் உங்களுக்கு வரப்போகும் கதியைக் கண்டு என் மாசற்ற இருதயம் துக்கத்தால் நடுங்குகிறது.
அதிகமாய் செபியுங்கள்.
செபமாலை சொல்லி என்னுடன் சேர்ந்து செபியுங்கள்.இந்நாட்கள் குறைக்கப்படும்படியாகவும் எவ்வளவு அதிகமான என் மக்கள் நித்தியமாய்க் காப்பாற்றபட முடியுமோ அத்தனை பேர் காப்பாற்றப்படும் படியாகவும் ஜெபித்து தவஞ்செய்யுங்கள்.கடவுளிடமிருந்து வெகுதொலைவிற்கு சென்றுவிட்டவர்கள் மனந்திருமபுவதிற்கு துன்பங்கள் உதவும்படியாக மன்றாடுங்கள்.
பிதாவின் அன்பை ஒரு போதும் சந்தேகப்படாதிருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.அவர் எப்பொழுதும் உங்களை கண்காணிக்கிறார்.உங்களுக்கு வேண்டியதைத் தருகிறார்.கெட்டுப்போதல்,பிரமாணிக்கம் கெடல்,எதிர்ப்பு,அசுத்தம்,நாஸ்திகம் என்ற நோய்களிலிருந்து உங்களை குணப்படுத்தும் மார்க்கமாக துன்பத்தை உபயோகிக்கிறார்.
அதிகமான செபத்தை உங்களிடம் கேட்கிறேன்.நன்றாக என்னுடன் சொல்லப்படும் செபமாலைகளின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள்.உங்கள் துன்பங்களையும் தவமுயற்சிகளையும் எனக்குக் கொடுங்கள்.பாவிகள் மனம்திரும்புவதற்காகவும்,செபமும் தவமும் செய்யும்படி உங்களிடம் கேட்கிறேன்.கடவுள் ஒரு தந்தையின் இரக்கமுள்ள ஆவலுடன் அவர்களை எதிர்பார்த்திருக்கிறார்.
அப்பொழுது நாம் எல்லாரும் ஒரு பெரிய அன்பின் வலையாக ஆவோம்.அது உலக முழுவதையும் மூடி அதைக்காப்பாற்றும் .அவ்வாறு தவறிப் போன அனைவரின் மீட்புக்காக தாய்குரியதும் அனைத்தையும் அடக்கியதுமான என் ஈடுபாடு எங்கும் எட்டக்கூடியதாயிருக்கும்.
-தேவமாதா
அருள்நிறை மந்திரத்தின் பெருமை
வெறுப்போர் வாழ்வில் ஆன்மீக வறுமை
மூவொரு இறைவன் அருளிய வார்த்தை
மாமரி அன்னைக்கு பலம் தரும் வார்த்தை
செபமாலை என்பது ஏளனம் அல்ல
ஜெயம் தரும் மாலை உலகை வெல்ல
அன்னையில் துவக்கி ஏசுவில் முடிந்து
அலகையின் தலையை அடித்தே நொருக்கு.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment