இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் - 8
என் அருமை மகன்களே ! தாய்க்குரிய என் அன்பினுடையவும் துயரத்தினுடையவும் மறைபொருளை நீங்களும் பகிரந்துக்கொள்ளும்படியாக என் மாசற்ற இருதயத்தின் இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.சேசு மரிக்கப்போகும் சமயத்தில் சிலுவையடியில் நான் நின்றபோது அவர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் மேல் இந்நாட்களில் என் இருதயம் மிக தூய்மையான அன்பால் துடிப்பதுபோல் முன் ஒருபோதும் துடித்ததில்லை.
என்னால் நேசிக்கப்படுவதாக திருச்சபை உணர வேண்டியது இன்றய தேவையாக இருக்கிறது.மனுக்குலம் என்னால் நேசிக்கப்படுவதாக இன்று உணர்வது அவசியமாக இருக்கிறது.என் எளிய பாவம் நிரம்பி அலையும் பிள்ளைகள் என்னால் நேசிக்கப்படுவதாக உணர்வதும் தேவையாகிறது.
உங்கள் வழியாக நான் நேசிக்க விரும்புகிறேன்.என்னுடைய மாசற்ற இருதயத்தில் மறை பொருளுக்குள் நுழையும்படி அழைக்கப்பட்டுள்ள உங்கள் வழியாக நான் மனுக்குலத்திற்கும் திருச்சபைக்கும் என் எல்லா மக்களுக்கும் உதவிசெய்ய விரும்புகிறேன்.
தாய்க்குரிய என் வேதனைகளை நீங்களும் கண்டுப்பிடிக்கும்படியாக உங்கள் இருதயத்தை நான் விசாலப்படுத்துவேன்.என் வேதனையை விட பெரிய வேதனை உண்டா என்றுப்பாருங்கள்.என் குமாரன் சேசு அதீத கொடுமைப்படுத்தப்பட்டு இகழப்படுகிறார்.அவர் தன்னுடையவர்களாலே மீண்டும் கைவிடப்பட்டு காட்டிக்கொடுக்கப்படுகிறார்.எப்பொழுதும் அதிகரித்து வருகிற தேவதுரோகங்கள், புது முள்முடியாக உருவாகின்றன.அவை உலகத்தில் எல்லாப் பாகங்களிலும் இருக்கிற திவ்விய நற்கருணை பேழைகளை சுற்றிவளைக்கின்றன.
ஆண்டவருக்கெதிராக எதிர்தெழும் மனுக்குலம் கடவுளை வெறுத்து ஒதுக்கும் பாதையில் தடுக்க முடியாத விதமாகப் பாய்ந்துச் செல்கிறது. இது இம்மனுக்குலத்தை மரணமும் அழிவின் நாசமுள்ள பாதாளத்திற்குள் விழும்படி கொண்டுச் செல்கிறது.எங்கும் பரவியுள்ள ஆபத்தான இக்குழப்பத்தால் ஒவ்வொரு நாளும் இழக்கப்படுகிற ஆத்தமாக்கள் எத்தனை பேர்!!
தாயினுடைய என் துயரத்தில் பங்குக்கொள்ளுங்கள் ஒருவரையும் தீர்பபிடாதேயுங்கள்.ஒருவரையும் குற்றவாளியாக்காதேயுங்கள்.ஜெபியுங்கள் ,நேசியுங்கள்.சிலுவையாகிய இப்பெரும் வேதனையை எல்லாருடைய இரட்சணியத்திற்க்காகவும் என்னுடன் சேர்ந்து சுமங்கள்.
உங்களனைவரையும் நான் நித்தியத்திற்கும் மூடியிருக்கிற என் மாசற்ற இருதயத்தின் அன்பினாலும் அதன் துயரத்தாலும் ,இன்று மனுக்குலம் முழுவதிலும் பொழியப்படுகிற சேசுவின் இரக்கமுள்ள அன்பின் ஒளியை பூமியின் சகல பாகங்களிலும் பரப்புங்கள்.பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே நான் உங்கள் ஆசீர்வதிக்கிறேன்.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment