Posts

Showing posts from October, 2021

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்

Image
  என் அருமை மகன்களே என்னுடைய கண்கள் வழியாக நீங்கள் பாருங்கள்.அப்போது தேவ ஆவியின் வல்லமை மிக்க செயலின் கீழ் திருச்சபை தன்னையே உள்ளரங்கமாய் புதுப்பித்துக் கொள்வதில் ஈடுபட்டுள்ளது என்பதை காண்பீர்கள். திருச்சபையை சுழந்திருக்கிற குளிர்ந்த அலட்சியத்தாலும் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிற பெரும் இருளினாலும் இப்புதுப்பித்தல் வெளிப்பார்வைக்கு தெரியவில்லை.தற்சமயம் திருச்சபையானது தன் சுத்திகரிப்பின் மிக வேதனையான சமயத்தைக கடந்துக்கொண்டிருக்கிறது. தன் அன்னையால் தாங்கப்பட்டு,திருச்சபையானது கல்வாரி யின் கடினப் பாதையில் ஏறிச்சென்று கொண்டிருக்கிறது.அங்கே தன்னுடைய அநேக மகன்களின் நலனுக்காக அது மீண்டும் சிலுவையிலறையப்பட்டுப் பலியாக்கப்படும்.ஆனால் நீங்கள் என்னோடு திருச்சபையின் இருதயத்தினுள் வாருங்கள்.அங்கே என் மாசற்ற இருதயத்தின் வெற்றி ஏற்கனவே அடையப்பெற்றுவிட்டது. சேசுவுக்கே புகழ் ! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் - 8

Image
  என் அருமை மகன்களே ! தாய்க்குரிய என் அன்பினுடையவும் துயரத்தினுடையவும் மறைபொருளை நீங்களும் பகிரந்துக்கொள்ளும்படியாக என் மாசற்ற இருதயத்தின் இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன்.சேசு மரிக்கப்போகும் சமயத்தில் சிலுவையடியில் நான் நின்றபோது அவர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் மேல் இந்நாட்களில் என் இருதயம் மிக தூய்மையான அன்பால் துடிப்பதுபோல் முன் ஒருபோதும் துடித்ததில்லை. என்னால் நேசிக்கப்படுவதாக   திருச்சபை உணர வேண்டியது இன்றய தேவையாக இருக்கிறது.மனுக்குலம் என்னால் நேசிக்கப்படுவதாக இன்று உணர்வது அவசியமாக இருக்கிறது.என் எளிய பாவம் நிரம்பி அலையும் பிள்ளைகள் என்னால் நேசிக்கப்படுவதாக உணர்வதும் தேவையாகிறது. உங்கள் வழியாக நான் நேசிக்க விரும்புகிறேன்.என்னுடைய மாசற்ற இருதயத்தில் மறை பொருளுக்குள் நுழையும்படி அழைக்கப்பட்டுள்ள உங்கள் வழியாக நான் மனுக்குலத்திற்கும் திருச்சபைக்கும் என் எல்லா மக்களுக்கும் உதவிசெய்ய விரும்புகிறேன். தாய்க்குரிய என் வேதனைகளை நீங்களும் கண்டுப்பிடிக்கும்படியாக உங்கள் இருதயத்தை நான் விசாலப்படுத்துவேன்.என் வேதனையை விட பெரிய வேதனை உண்டா என்றுப்பாருங்கள்.என் கும...

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-8

Image
  மனுக்குலம் தன் சொந்த கரத்தால் தன் மீதே கொண்டு வரக்கூடிய அழிவின் விளிம்பில் வந்து நிற்கிறது.உங்களுடைய இக்காலத்தின் இறுதி முடிவைப் பற்றி நான் பாத்திமாவில் முன்னுரைத்தது இதோ தொடங்கிவிட்டது. கடவுளுக்கெதிராய் பிடிவாதமான எதிர்ப்பின் பாதையில் மனுக்குலம் அடைந்துள்ள துன்மார்க்கம் நாளுக்குநாள் ஆழமாகிக்கொண்டிருக்கும் போது,தேவ நீதியின் கரத்தை தடுத்து நிறுத்த இனிமேலும் என்னால் எப்படிக் கூடும்? எத்தனை நாடுகள் இதனால் பாதிக்கப்படும் ! எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள்! மேலும் பலர் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிக்க நேரிடுமே ...பஞ்சம்,நெருப்பு,மகா பெரிய நாசம் இவையே மனுக்குலத்தை தாக்கவிருக்கும் தண்டணையை உங்களுக்கு  கொண்டு வரப்போகின்றவை. என் அருமை மகன்களே! என் அவசர வேண்டுகோளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளுங்கள்.ஏனென்றால் உங்களுக்கு வரப்போகும் கதியைக் கண்டு என் மாசற்ற இருதயம் துக்கத்தால் நடுங்குகிறது. அதிகமாய் செபியுங்கள். செபமாலை சொல்லி என்னுடன் சேர்ந்து செபியுங்கள்.இந்நாட்கள் குறைக்கப்படும்படியாகவும் எவ்வளவு அதிகமான என் மக்கள் நித்தியமாய்க்  காப்பாற்றபட முடியுமோ அத்தனை பேர் காப்பாற்றப்படும் படியாகவ...