பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்-4
49.பூசை பரிசுத்தமான விசுவாசத்தின் ஒப்பற்ற செயல்பாடாக இருக்கிறது.இது பெரும் சம்பாவனையைப் பெற்றுத்தரும்.
50.திவ்விய நற்கருணை முன்னும்,திரு இரத்தம் நிறைந்த திரு கிண்ணம் முன்னும் நாம் பணிந்து வணங்கும்போது ,ஒர் உன்னதமான ஆராதனை முயற்சியை செய்கிறோம்.
51.திவ்விய நற்கருணையை வணக்கத்தோடு உற்றுநோக்கும் ஒவ்வொரு முறைக்கும் ,மோடசத்தில் ஒரு சம்பாவனையை பெற்றுக்கொள்கிறோம்.
52.நாம் பூசைக்காணும் ஒவ்வொரு முறையும் மிக்கடுமையான தவ முயற்சிகளைவிட அதிகமான பரிகாரத்தை நமது பாவங்களுக்குரிய பரிகாரத்தை செலுத்தலாம்.
53.சாவானப்பாவத்தோடு நாம் பூசைக்கண்டால் மனந்திரும்பும் வரத்தை கடவுள் தருகிறார்.
54.தேவ இஷ்டபிரசாத நிலையில் பூசையில் பங்கெடுத்தால் வரப்பிரசாதத்தில் இன்னும் அதிகரிக்கும் வரத்தை தருகிறார்.
55.திவ்விய பலிப்பூசையில் நாம் கிறிஸ்துநாதரின் திருச்சரீரத்தை புசித்து திரு இரத்தத்தை பானம் செய்கிறோம்.
56.தேவதிரவிய அனுமானமாகிய திரையின் கீழ் மறைந்திருக்கும் கிறிஸ்துநாதரை நமது கண்களால் காணவும் அவரால் காணப்படவும் சலுகைப் பெறுகிறோம்.
57.குவானவரின் ஆசீர்வாதத்தை பெறுகிறோம்.அது மோட்சத்தில் கிறிஸ்துநாதரால் உறுதிப்படுத்தப்படுகிறது.
58.திவ்விய பலிப்பூசை பங்கேற்பதில் அக்கறையாய் இருப்பதன் மூலம் சரீர மற்றும் உலக ரீதியான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறோம்.
59.பூசை பங்கேற்காமல் இருப்பதனால் ஏற்படவிருக்கும் பல நிர்ப்பாக்கியங்களிலிருந்து ,பூசை காண்பதன் மூலம் பாதுகாக்கப்படுகிறோம்.
60.வேறு வகையில் நாம் மேற்கொண்டிருக்ககூடிய சோதனைகளுக்கு எதிராக நாம் காணும் பூசையால் பலப்படுத்தப்படுகிறோம்.
*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.*
தொடரும்....
பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்
புவியில் இல்லையே
புவி நிரம்ப பொன் தந்தாலும்
இப்பலிக்கு ஈடில்லையே..!
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Source Link
https://www.catholictamil.com/2020/12/77-21-40.html?m=1

Comments
Post a Comment