பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.
25.கிறிஸ்துநாதர் பேறுபலன்களில் ஒரு பகுதியை நமது கணக்கில் வைக்கிறார்.நமது பாவங்களுக்கு பரிகாரமாக பிதாவாகிய சர்வேசுரனுக்கு அவற்றைச் செலுத்தலாம்.
26.நமக்காக கிறாஸ்துநாதர் தம்மையே அன்னைத்திலும் அதிக பயனுள்ள சமாதானப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார்.சிலுவையின் மீது நமது எதிரிகளுக்காக பரிந்து பேசியது போல நமக்காகவும் அவர் ஏக்கத்தோடு பரிந்துப்பேசுகிறார்.
27.அவரது விலைமதியாத திரு இரத்தம் அவரது புனித இரத்த நாளங்களிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்துளிகளுக்கு ஒப்பான கணக்கற்ற வார்த்தைகளில் நமக்காக பரிந்து பேசி ஜெபிக்கிறது.
28.அவரது திருச்சரீரம் தாங்கிய ஆராதனைக்குரிய ஒவ்வொரு காயமும் நமக்காக இரக்கத்தை மன்றாடும் குரலாக இருக்கிறது.
29.இந்தப் பரிகாரப்பலியின் நிமித்தமாக பூசையின் போது நாம் முன்வைக்கும் விண்ணப்பங்கள் மற்ற சமயங்களில் வழங்கப்படுவதை விட அதிச்சீக்கிரமாக நமக்கு வழங்கப்படும்.
30.பூசையில் பங்குப் பெற்று ஜெபிப்பதைப்போல அதிக நன்றாக வேறு ஒரு போதும் நம்மால் ஜெபிக்க முடியாது.
31.ஏனெனில் கிறிஸ்துநாதர் தமது செபங்களை நமது செபங்களோடு இணைத்து அவற்றை தம் பரலோக பிதாவிற்கு ஒப்புக்கொடுக்கிறார் என்பதாலேயே.
32.அவர் நமது தேவைகளோடும் நமக்கு உண்டாகக்கூடிய ஆபத்துக்களையும் அறிந்துக்கொள்கிறார்.நமது நித்திய இரட்சணியத்தை தமது தனிப்பட்ட கவலையாக்கிக் கொள்கிறார்.
33.கூடியுள்ள தேவதூதர்களும் நமக்காக மன்றாடுகிறார்கள்.நமது பரிதாபமான செபங்களை கடவுளின் சிம்மாசனத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
34.நமது நிமித்தமாக குரு பூசை நிறைவேற்றுகிறார்.அதன் பலனாக தீய சத்துரு நம்மை நெருங்க துணியமாட்டான்
35.நமக்காகவும் நமது நித்திய இரட்சணியத்திற்க்காகவும் அவர் பூசை நிறைவேற்றுகிறார்.சர்வ வல்லவரான கடவுளுக்கு பரிசுத்த பலியை ஒப்புக்கொடுக்கிறார்.
36.நாம் பக்தியுடன் பூசைக் காணும் போது நம்மிலே நம் ஆவியில், நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் பூசை ஒப்புக்கொடுக்க கிறிஸ்துவினால் அதிகாரம் பெற்ற குருவாகிறோம்.
*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.*
தொடரும்....
பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்
புவியில் இல்லையே
புவி நிரம்ப பொன் தந்தாலும்
இப்பலிக்கு ஈடில்லையே..!
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Source Link
https://www.catholictamil.com/2020/12/77-21-40.html?m=1

Comments
Post a Comment