பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.
1.நமது இரட்சணியத்திற்காக, பிதாவாகிய சர்வேசுரன் தம் நேசத்திற்க்குரிய திருச்சுதனை பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்புகிறார்.
2.நமது இரட்சணியத்திற்காக, பரிசுத்த ஆவாயானவர் அப்பத்தையும்,திராட்சை இரசத்தையும் கிறிஸ்து நாதருடையை மெய்யான திருசரீரமாகவும்,இரத்தமாகவும் மாற்றுகிறார்.
3.நமக்காக, தேவச்சுதன் பரோலகத்திலிருந்து இறங்கி வந்து பரிசுத்த அப்ப வடிவத்தின் கீழ் தன்னை மறைத்துக் கொள்கிறார்.
4.திவ்விய நற்கருணையின் சிறு துண்டிலும் கூட தாம் பிரசன்னமாயிருக்கும் அளவுக்கு தம்மை தாழத்திக்கொள்கிறார்.
5.நமது இரட்சணியத்திறக்காக அவர் இரட்சணியத்தின் மனிதவதார இரகசியத்தைப் புதுப்பிக்கிறார்.
6.நமது இரட்சணியத்திறக்காக திவ்வியபலிப்பூசை நிறைவேற்றப்படும் போதெல்லாம் அவர் பரம இரகசியாமான முறையில் பூமியில் மீண்டும் பிறக்கிறார்.
7.நமது இரட்சணியத்திற்க்காக, தாம் பூமியிலிருந்தபோது நிகழ்த்திய அதே வழிபாட்டுச் செயல்களை அவர் பீடத்தின் மீது நிகழ்த்துகிறார்.
8.நமது இரட்சணியத்திறக்காக அவரது பாடுகளில் நாம் பங்குபெறும்படியாக அவர் தமது கசப்பான பாடுகளை புதுப்பிக்கிறார்.
9.நமது இரட்சணியத்திறக்காக அவர் பரம இரகசியமான முறையில் தமது மரணத்தைப் புதுப்பிக்கிறார்.நமக்காக தமது விலைமதியாத உயிரை பலியாக்குகிறார்.
10.நமது இரட்சணியத்திற்காக பரம இரகசியமான முறையில் அவர் தம் திருஇரத்தத்தை சிந்தி அதை நமக்காக தேவ மகத்துவத்திறக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
11.இந்த விலைமதிக்கப்படாத திருஇரத்தத்தை அவர் நமது ஆத்துமத்தில் தெளித்து ஒவ்வொரு கறையினின்றும் அதை சுத்திகரிக்கிறார்.
12.நமக்காக கிறிஸ்துநாதர் ஒரு உண்மையான தகனப்பலியாக தம்மையே ஒப்புக்கொடுத்து தெய்வீகத்திற்கு உரியதாயிருக்கிற உன்னத மகிமையை அதற்குச் செலுத்துகிறார்.
தொடரும்....
பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment