புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு குருவானவர் ஒரேயொரு பூசை வைப்பதன் மூலம் கடவுளுக்கு தரும் மகிமையை,முழுத் திருச்சபையும் அவருக்கு தர முடியாது.அவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவும் முடியாது.இதன் காரணமாக சேசு கிறிஸ்துநாதரை திவ்விய பலியாக தாம் ஒப்புக்கொடுக்கிற ஒரேயொரு பூசை நிறைவேற்றுவதன் மூலம் எவ்வளவு பெரிய மகிமையை ஆண்டவருக்கு தருகிறார் என்றால் சகல மனிதர்களும் கடவுளுக்காக மரித்து,தங்கள் அனைத்து உயிர்களையும் பலியாக ஒப்புக்கொடுத்தாலும் அத்தகைய மகிமையை ஆண்டவருக்கு தர முடியாது.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment