புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு பரிசுத்த துறவிக்கு குருப்பட்டம் வழங்கிய பிறகு,தேவாலய வாசல் வரைக்கும் சென்றவர்,தமக்குப் பின்னால் வந்துக்கொண்டிருந்த புதிய குருவிற்கு வழிவிடும் படி ஒதுங்கி நின்றார்.அப்படி நின்றதன் காரணம் பின்வருமாறு.
இந்த புதியக்குருவின் காவல்தூதரை காணும் பாக்கியத்தை கடவுள் எனக்கு தந்தார்.இவர் குருப்பட்டம் பெறும் வரை அவருடைய காவல்தூதர் அவருக்கு முன்னாலோ அல்லது வலது பக்கத்திலேதான் எப்போதும் இருந்தார்.ஆனால் அவர் குருப்பட்டம் வாங்கிய வினாடியிலிருந்து சம்மனசானவர் அவரது இடப்புறத்தில் நடந்து வருகிறார்.குருவனாவர் முன் செல்ல மறுக்கிறார்.அவரோடு ஒரு பரிசுத்தப்போட்டியில் ஈடுபடும்படியாக நானும் இந்த நல்ல குருவுக்குப் பின்னால் வரும்படி வாசலிலே நின்றுவிட்டேன்.
அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார்.
பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment