புனிதர்களின் பொன்மொழிகள்


 

மனிதர்களில் அதித மகிழ்ச்சியானவர்களாகிய குருக்கள்.

பக்தியுள்ள குருக்கள் திவ்வியபலிபூசை நிறைவேற்றும் போது சொல்லமுடியாத ஆழ்ந்த திருப்த்தியையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார்கள்.

1.கடவுளுடனேயே நேரடியான நெருங்கிய தனிப்பட்ட தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.அவரை கரங்களில் ஏந்துகிறார்கள்.அவரை நெருங்கி பாரத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவருடன் உரையாடுகிறார்கள்.அவரும் வாக்குக்கெட்டாத நேசத்தோடு அவர்களுடைய இருதயங்களை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

2.சகல சம்மனசுகளும், அரச்சிஷ்டவர்களும் மோட்ச்சத்தில் அவருக்கு தருவதை விட மேலான மகிமையை,அவரே ஆசிக்ககூடிய அனைத்திலும் மேலான மகிழ்ச்சியையும் மகிமையையும் குருக்கள் அவருக்கு தந்துக்கொண்டிருக்கிறார்கள்.

3.குருக்கள் தங்கள் மீதும்,தங்கள் நாட்டின் மீதும்,உலகத்தின் மீதும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறார்கள்.

4.குருக்கள் தங்கள் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருக்கிற   பரிசுத்த சம்மனசுகளின் படையணிகளால் சூழப்பட்டுள்ளார்கள்.

5.இறுதியாக உத்திரிக்கும் ஸ்தலத்தில் வேதனையுறும் ஆன்மாக்களுக்கு உதவி செய்து ஆறுதல் அளிக்கிறார்கள்.

திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்.

இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

அர்ச்.சூசையப்பரே !

 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!