பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும்.-2


 

13.கடவுளுக்கு இந்த திவ்விய பலி பூசையை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவருக்கு நாம் தர தவறிய மகிமைக்கு உரிய பரிகாரம் செய்கிறோம்.

14.நமக்காக கிறிஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுக்கு தம்மையே புகழ்ச்சி பலியாக ஒப்புக்கொடுத்து,அவரது திருநாமத்தை துதிக்க தவறிய நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்கிறார்.

15.கிறிஸ்துநாதர் ஒப்புக்கொடுக்கும் இந்த திவ்விய பலியை நாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் சம்மனசுகள் செலுத்துவதை விட அதிகமான ஸ்துதி புகழ்ச்சியை நாம் செலுத்துகிறோம்.

16.நமக்காக கிறிஸ்துநாதர் உத்தமமான நன்றியறிந்த  தோத்திர பலியாகத் தம்மையே ஒப்புக்கொடுத்து நாம் நன்றி செலுத்த தவறியப் பாவங்களுக்கு பரிகாரம் செய்கிறார்.

17.கிறிஸ்துநாதரின் இந்த நன்றியறிதலை   கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவர் நம்மீது பொழிந்துள்ள நன்மைகள் அனைத்திற்கும் நாம் போதுமான அளவு நன்றி செலுத்துகிறோம்.

18.நமக்காக கிறிஸ்துநாதர் சர்வ வல்லபமுள்ள பலிப்பொருளாக தம்மை பலிக்கொடுப்பதன் மூலம் நாம் நோகச் செய்த கடவுளோடு நம்மை மீண்டும் ஐக்கியப்படுத்துகிறார்.

19.நமது அற்ப பாவங்களை விட்டுவிடுவதாக உறுதியான பிரதிக்கினை செய்யும் பட்டசத்தில்,அவர் நமது அற்ப பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார்.

20.நமது கடமையில் தவறிச் செய்த பலப் பாவங்களுக்கும்,நாம் செய்திருக்க வேண்டிருந்தும் செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளுக்கும் அவர் பரிகாரம் செய்கிறார்.

21.நமது நற்செயல்களோடு சேர்ந்துள்ள குறைபாடுகளில் பலவற்றை அவர் அகற்றுகிறார்.

22.பாவசங்கீரத்தனத்தில் நாம் ஒருபோதும் சொல்லிராத மறக்கப்பட்ட அல்லது நமக்கு தெரியாத பாவங்களை மன்னிக்கிறார்.

23.நமதுப்பாவ கடனிலும்,மீறுதல்களிலும் குறைந்தபட்சம் ஒருப்பகுதிக்காவது பரிகாரம் செய்யும் பலிப்பொருளாக அவர் தம்மையே ஒப்புக்கொடுக்கிறார்.

24.நாம் பூசைக்காணும் ஒவ்வொரு முறையும் மிக்கடுமையான தவ முயற்சிகளைவிட அதிகமான பரிகாரத்தை நமது பாவங்களுக்குரிய பரிகாரத்தை செலுத்தலாம்.

பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.

தொடரும்....


இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Source Link

https://www.catholictamil.com/2020/12/77-21-40.html?m=1

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!