நோயில் பூசுதலும்,திருப்பலியும் கொரோனா நோயாளிகளுக்கு மறுக்கப்படுவது நியாயமா ?

 


நோயில் பூசுதலும்,திருப்பலியும் கொரோனா நோயாளிகளுக்கு மறுக்கப்படுவது நியாயமா ?

அன்பு ஆயர்களே குருக்களே!

கொரோனா நோயாளிகளை மருத்துவர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளுடன்  குணப்படுத்த முயற்சிக்கும் போது.ஆன்மாவிற்கு தேவையான அவஸ்தை பூசுதல் எனும் திருவருட் சாதனத்தை நிறைவேற்றுவதில் ஏன் தங்களுக்கு இன்னும் தயக்கம்? மருத்துவர்களும் மனிதர்கள் தானே, உடல் அழியக்கூடாது என்கிற அவர்களுக்கு உள்ள ஆவல் ,ஆன்மா அழியக்கூடாது என்கிற நமது மீட்பரின் தாகம் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுக்கு இல்லாமல் போனது ஏன் ? 


கொரோனா நோயால் இறந்த சடலங்களை துப்புரவு பணியாளர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கையுடன் Pack செய்துதரும் போது இறந்தவர்களுக்காக ஒரு பூசை வைப்பதில் ஏன் தங்களுக்கு அச்சம்?துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள் தானே நோய்பரவக்கூடாது என அவர்களே தகுந்த முறையில் சடலத்தை மூடி சவப்பெட்டியில் ஆணிகள் அடித்து தரும்போது பெட்டிக்குள் உள்ள சடலத்துக்கூட ஏன் தங்களால் ஒரு திருப்பலி நிறைவேற்ற மனம்வரவில்லை.


கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை நமது அரசாங்கம் செய்து தருகிறது.ஆனால் அதைவிட முக்கியமான கொரோனா நோயாளிகளின் ஆன்மாவிற்குத் தேவையான கத்தோலிக்க மதத்தின் அடிப்படையான அவஸ்தையை யும்,மரணத்திருப்பலியையும் எப்போது நிறைவேற்றப்போகின்றீர்கள்.இறைவனுடைய சாயலான ஆனமாக்களுக்கு தாங்கள் செய்யும் கைமாறு இதுதானா?என்ன பதில் தாங்கள் சொன்னாலும் நமது ஆண்டவர் தான் ஏற்பாரோ? கொடுக்கப்பட்ட ஒரு தாலந்துக்கே கணக்கு கேட்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இறுதி திருவருட்சாதனம் திருப்பலி இல்லாமல் விடப்படும் பல கொரோனா ஆன்மாக்களுக்கு  கணக்கு கேட்காமல் தான் விடுவாரோ !

கொரோனா அச்சம் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தங்களை பாதிக்காத வகையில் மருத்துவர்கள்,செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடமையை துணிந்து, அஞ்சாமல் செய்யும் போது,அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்  தாங்களும் கொரோனா நோயாளிகளுக்கு செய்யவேண்டிய ஆன்மீக கடமைகளை செய்ய எப்போது சம்மதம் சொல்ல போகின்றீர்கள் ?


ஆலயமே கதி, திருப்பலியே நிம்மதி பெருமூச்சு என வாழ்ந்த எம் கத்தோலிக்க கொரோனா நோயாளிகளுக்கும், மரித்தவர்களுக்கும் தாங்கள் செய்யும் ஆன்மீகப்பணி இதுதானா?


நோயில்பூசுதலும்,மரணத்திருப்பிலியும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையில்லாதவையா ? முக்கியமில்லாமல் ஒதுக்கி தள்ள வெறும் சடங்கா? அவர்களிடம் ஆன்மா தான் இல்லையா ?அல்லது இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத பிரிவினை சபைகளின் வழிமுறைகளை கொரோனா நியாயம் பேசி பினபற்றுவதுதான் சரியாகுமா ? மற்ற நோய்களுக்கு அவஸ்தை உண்டு, கொரோனா என்றால் இல்லை.மற்ற மரணத்திற்கு திருப்பலி உண்டு, கொரோனா மரணம் என்றால் இல்லை.கொரோனா நோயாளிகள் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களா?தாங்கள் கொடுக்கும் அவஸ்தையினால்  கொரோனா நோயாளிகள் குணமாகவும் பாவ விடுதலை பெறவும் வாய்ப்பு தான் இல்லையா?


ஓராண்டுக்குமேல் கொரோனா ஆன்மாக்களை தவறவிட்டது போதும், மாற்றியோசியுங்கள் நாளை உடலை கொள்ளும் இந்த கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் ஏன் நமக்கும் நமது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏன் குருக்களுக்கும் ஆயர்களுக்கும் வரலாம் .கொரோனாவால் அழிக்கமுடியாத ஆன்மாவிற்க்கு மண்ணுலகில் தாங்கள் செய்யும், தங்களால் மட்டுமே செய்யமுடியும் இறுதிஅவஸ்தையையும்,இறுதி திருப்பலியையும் செய்ய முன்வாருங்கள்.ஆன்மாக்களை காப்பாற்றுங்கள்.


"ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோர்க்கு அஞ்சாதீர்கள்"

மத்தேயு 10-28.


இயற்கை சீற்றங்களையும்

கொள்ளை நோய்களையும்

இறைவன் அனுமதிப்பதே !

நாம் விசுவாசத்தில் ஊன்றி நிற்பதற்கே !


ஆண்டவரே அன்று  தொழுநோயாளிகளுடைய ஆனமாக்களை மீட்க புனித தமியான் அடிகளாரை தூண்டியதைப் போல் இன்று கொரோனாவால் பாதிப்படைந்த ஆன்மாக்களை மீட்க உமது செல்லப் பிள்ளைகளாம் குருக்களுக்கு தூய ஆவியால் தூண்டியருளும்.


இயேசுவுக்கே புகழ் !


அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!