Posts

Showing posts from April, 2021

துன்பத்தில் இறைவனுக்கு கீழ்படிதலே உண்மை பக்திமுயற்சி

Image
  நமது வாழ்கையில் வெளியில் சொல்லமுடியாத கஷ்டங்கள் கண்ணீரை அடக்கமுடியாத துன்பங்களில் இறைவனுக்கு கீழ்படியும் போது தான் உண்மையிலேயே இறைவனுக்கு பிரம்மாணிக்கமாய் இருக்கிறோம். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

நோயில் பூசுதலும்,திருப்பலியும் கொரோனா நோயாளிகளுக்கு மறுக்கப்படுவது நியாயமா ?

Image
  நோயில் பூசுதலும்,திருப்பலியும் கொரோனா நோயாளிகளுக்கு மறுக்கப்படுவது நியாயமா ? அன்பு ஆயர்களே குருக்களே! கொரோனா நோயாளிகளை மருத்துவர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளுடன்  குணப்படுத்த முயற்சிக்கும் போது.ஆன்மாவிற்கு தேவையான அவஸ்தை பூசுதல் எனும் திருவருட் சாதனத்தை நிறைவேற்றுவதில் ஏன் தங்களுக்கு இன்னும் தயக்கம்? மருத்துவர்களும் மனிதர்கள் தானே, உடல் அழியக்கூடாது என்கிற அவர்களுக்கு உள்ள ஆவல் ,ஆன்மா அழியக்கூடாது என்கிற நமது மீட்பரின் தாகம் அபிஷேகம் செய்யப்பட்ட தங்களுக்கு இல்லாமல் போனது ஏன் ?  கொரோனா நோயால் இறந்த சடலங்களை துப்புரவு பணியாளர்களே தகுந்த முன்னெச்சரிக்கை நடவெடிக்கையுடன் Pack செய்துதரும் போது இறந்தவர்களுக்காக ஒரு பூசை வைப்பதில் ஏன் தங்களுக்கு அச்சம்?துப்புரவு பணியாளர்களும் மனிதர்கள் தானே நோய்பரவக்கூடாது என அவர்களே தகுந்த முறையில் சடலத்தை மூடி சவப்பெட்டியில் ஆணிகள் அடித்து தரும்போது பெட்டிக்குள் உள்ள சடலத்துக்கூட ஏன் தங்களால் ஒரு திருப்பலி நிறைவேற்ற மனம்வரவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை நமது அரசாங்கம் செய்து தருகிறது.ஆனால் அதைவிட முக்கியமான கொரோன...

துன்பமே இறைவனை அடையும் சுலபமான வழி.

Image
  ஒவ்வொரு துன்பங்களையும் இறைவன் அனுமதிப்பது நம்மை பாவ நிலையிலிருந்து திருத்துவதற்க்காக மட்டுமே.ஏனெனில் பாவி செய்யும் தானம், தர்மம் புண்ணியங்கள் எதுவும் இறைவனை அடைவதில்லை.இறைவனிடமிருந்தும் அருளையும் ஒரு பாவி பெற்றுக்கொள்ளமுடிவதில்லை. மனம்திருந்தியப்பின் பாவ வாழ்க்கையை விட்டப்பின் வரும் துன்பங்கள் நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு தண்டனையாக மனமுவந்து ஏற்றுக்கொண்டு செய்த பாவங்களுக்கு பரிகாரமாக ஏற்றுக்கொள்ளும் போதுதான் துன்பங்கள் அருள் வரங்களை பெற்றுத்தரும் ஆசீர்வாதங்களாக மாறும்.துன்பமே இறைவனை அடையும் சுலபமான வழி. இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !