Posts

Showing posts from June, 2020

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
மாமரியின் பெயரில் எல்லோரும் முழந்தாட் படியிடுகின்றனர்.பேய்கள் பயப்படுவது மட்டுமன்றி அப்பெயரை கேட்டாலே நடுங்குகின்றன.மனிதர் அருகில் ஓர் இடி  விழுந்தால் பயத்தில் எண்சாண் கிடையாய் கீழே விழுவது போல் ,பேய்கள் மாமரியின் பெயரை கேட்டதுமே விழுகின்றன. புனித பெர்நார்து.

புனிதர்களின் பொன்மொழிகள் 27/06/2020

Image
ஓ மனிதனே இறைவனின் திட்டங்களை பார்! அத்திட்டங்கள் வழியே தான் இறைவன் தம் இரக்கத்தை நம் மீது ஏராளமாக பொழியக கூடும் .ஏனெனில் ,மனித இனம் முழுவதையும் மீட்க விரும்பிய கடவுள் தேவதாய் தம் விருப்பப்படி பகிர்ந்தளிப்பதற்காக மீட்பின் கிரையம் முழுவதையும் அவர்களின் கையில் ஒப்படைத்துள்ளார். புனித பெர்நார்து.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர்,நாங்களோ பாவஞ்செய்தோம் ..எழுந்து உம்மை பற்றிக்கொள்பவன் எவனுமில்லை.இசையாஸ்(64:5-7) உண்மைதான் ஓ ஆண்டவரே , அந்த நாட்களில்,பாவிகளின் மனத்தைத் தூண்டி உம் கோபத்தைத் தணிக்க யாருமில்லை;ஏனெனில் மாமரி அப்போது பிறக்கவில்லை.ஆம் மாமரிக்கு முன்னால் கடவுளின் கரத்தை பிடித்து நிறுத்த யாருக்கு தைரியம் வரும்?ஆனால் இப்போது கடவுள் பாவிமட்டில் கோபமாயிருந்தால் மாதா அவனை தன் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டால் நம் திருமகனின் பழி தீர்க்கும் கரத்தை தாங்கி பிடித்து பாவியை காப்பாற்றுகிறார்கள். தெய்வ நீதி எனும் வாள்,பாவியின் மீது விழுந்து அவனை தண்டிக்காதிருக்க அதனை தம் சொந்தக கைகளாலேயே தாங்கி பிடுங்கி கொள்கிறார்கள்.மாமரியை தவிர வேறு யாரும் இப்பதவிக்கு அதிகப் பொருத்தமாகத் தோன்ற முடியாது. புனித பொனவெந்தூர். இயேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள் 25/06/2020

Image
சோதனை புயல் சீறி எழுகையில்,விசுவாசிகளின் மிக்க இரக்கமுள்ள நமது அன்னை,தாய்க்குரிய பரிவோடு,தம் மார்புடன் அணைத்து,அவர்களை மீட்பெனும் துறைமுகம் கொண்டு சேர்க்கும் மட்டும் பாதுகாக்கிறார்கள் . நோவாரினுஸ்.

புனிதர்களின் பொன்மொழிக

Image
எம் தாயாரே. தங்களின் அழகின் முழுமையால் தாங்கள் ஒரு கடவுளையே மோட்சத்திலிருந்து தங்களின் பரிசுத்தம் மிக்க உதரத்துக்கு ஈர்த்து விட்டீர்கள் !தங்களை நேசிக்காது நான் உயிர் வாழ்வதில் பொருளுண்டோ? புனித பொனவெந்தூர். இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
அன்னையே தங்கள் ஆற்றலுக்கு எதிராக நிற்பதற்கெதுவுமில்லை,ஏனெனில்,நம்மைப் படைத்தவர் தங்களைத் தம் தாயெனும் பெருமைக்குயர்த்தி தங்களின் மகிமையை தம் மகிமையெனக் கருதுகிறார்.தேவ சுதனும் அதில் மகிழ்வு கொண்டு தங்களுக்குப்பட்ட கடனை தீர்ப்பதாகவே எண்ணித் தங்களின் விண்ணப்பத்தை நிறைவேறறுகிறார். புனித ஜார்ஜ்.

புனிதர்களின் பொன்மொழிகள் 22/06/2020

Image
புனித கன்னிமாமரி இறைவனுடைய இரக்கத்தின் அதல பாதாளத்தினை, அவர்கள் விரும்பும் நபருக்கு,விரும்பும்போது,விரும்புகிற அளவுக்குத் திறக்கிறார்கள் எனவே,அவர்கள் பாதுகாக்க விரும்பும் ஒருவர் எவ்வளவு பெரிய பாவியாயிருப்பினும் மீட்பின்றி சேதமுருவதில்லை. புனித பெர்நார்து.

புனிதர்களின் பொன்மொழிகள் 21/06/2020

Image
  தம் உதிரத்தில் நித்திய வார்த்தையைக் கருத்தரித்து பெற்றெடுத்த போது,புனித கன்னி மாமரி,கடவுளின் அரசில் பாதியைப் பெற்றார்கள்.அவர்கள் இரக்கத்தின் அரசியாகவும் ,இயேசு கிறிஸ்து நீதியின் அரசராகவும் ஆனார்கள். புனித தாமஸ்.