புனிதர்களின் பொன்மொழிகள் 22/03/2020
உலக மக்களின் பாவாழ்க்கையும் , இறைவனின் கண்டிப்பும்(கொரோனா)
இன்னும் தண்டிக்க ஆரம்பிக்க வில்லை!
நாம் பாவம் செய்கிறோம், பாவத்தின் மேல் பற்றுதல் வைக்கிறோம்.சிலரோ பாவத்தோடு மாத,வருடக் கணக்காக உறங்கவும் செய்கிறார்கள்.நாம் பாவத்தில் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும் சிலர் தங்கள் பாவங்களை பற்றிப் பெருமையாய் பேசத்துணிகிறார்கள்.ஆண்டவரே ! நாங்கள் உமக்கு சினத்தை மூட்டுகிறோம்.நீரோ நாங்கள் உமது இரக்கத்தைக் கேட்கும்படித் தூண்டுகிறீர்.இதை பார்க்கும்போது நாம் கடவுளோடு போர் செய்வது போலாகிறது.அதாவது ஆண்டவர் நம்மை தண்டிக்கும் படி அவருக்கு கோபம் உண்டாக்குவதும், நாம் அவரிடம் மன்னிப்பு கேட்கும்படி அவர் நம்மை ஏவித் தூண்டுவதுமான ஒரு மற்போராகும்.
-புனித அகஸ்தீன்.
Comments
Post a Comment