இறைவனின் இறைவார்த்தைகள் 13/09/2019
உரோமையர் 13:8
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்.
பொருளாகவோ, பணமாகவோ,கொடுத்த வார்த்தைக்காகவோ,யாரிடமும்
எதிலும் கடன்படாதீர்கள்.ஏனெனில் பிறரிடத்தில் அன்புடன் வாழ முயற்சிப்பவர்களை கடன் அன்புடன் வாழ விடாது.மற்றவர்களிடம் செலுத்த வேண்டிய ஒரே கடன் அன்பு மட்டுமே.பிறரிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்துவோர் நம்மை படைத்த இறைவனின் அன்பு கட்டளைக்கு கீழ்படிந்தவராகின்றனர்.
Comments
Post a Comment