இறைவனின் இறைவார்த்தைகள் 12/09/2019
உரோமையர் 12:10
உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்புகாட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள்.
நமது உடன்பிறப்புகள் இவர்கள் தான் என தீர்மானித்தது இறைவனே! மனிதனால் தனது உடன்பிறப்புகளை தேர்ந்தெடுக்கமுடியாது. இறைவன் தேர்ந்தெடுத்த உடன் பிறப்புகளுடன் சிறுவயதில் அன்போடும் ,ஒற்றுமையோடும் பகிர்ந்து விளையாடி மகிழ்கிறோம் ஆனால் வீடு,பணம்,சொத்துக்கள் மீது பேராசை வந்ததும் உடன்பிறப்புகளிடையே பகிர்தல் இல்லாமல் விரோதிகளாக்கபடுகின்றோம்.
தெரியாதவர்கள்,பகைவர்களிடமே உடன்பிறப்புகள் போன்று அன்பு செய்யவேண்டும் என்றால் உடன்பிறப்புக்குள்ளே விரோதிகளாக வாழ்பவர்கள் இறைவன் நமக்கு வழங்கிய திருகுடும்ப உறுப்பினர்களை வெறுத்து இறைவன் விருப்பத்தை புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை.
Comments
Post a Comment