ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு அனுகூலமாக பரிசுத்த தேவமாதா அரச்.சாமிநாதருக்கும்,முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த வாக்குறுதிகள்

ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு அனுகூலமாக பரிசுத்த தேவமாதா அரச்.சாமிநாதருக்கும்,முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த வாக்குறுதிகள்.

1.என் ஜெபமாலையை அன்போடு சொல்லி வருகிறவர்களுக்கு என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பையையும் வரப்பிரசாதங்களையும் கொடுப்பேன்.

2.ஜெபமாலை விடாமல் தொடர்ந்து செபிக்கிறவர்கள் சில விசேஷ வரங்களை என்னிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

3.நரகத்திற்கெதிரான வலிமையுள்ள கேடயமாக இருக்கும்  என் ஜெபமாலை ,தீய பழக்கங்களை அழிக்கும்.பாவத்திலிருந்து விடுவிக்கும்.தப்பறைகளை ஒழிக்கும்.

4.ஜெபமாலை ,புண்ணியங்களையும் நற்கிரியைகளையும் வளர்க்கும்.ஆன்மாக்களுக்கு மிக ஏராளமான தேவ இரக்கத்தைப் பெற்றுத்தரும். உலகப் பற்றுள்ள ஆன்மாக்கள் கடவுளை நேசிக்கும்படி செய்யும்.ஆன்மாக்கள் பரலோக நித்திய நன்மைகளை விரும்பும்படி அவர்களை உயர்த்தும் .ஜெபமாலையால் ஆன்மாக்கள் தங்களை அர்ச்சித்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன்.

5.ஜெபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் அழிவுறமாட்டார்கள்.

6.தேவ  இரகசியங்களை பக்தியுடன் தியானித்தபடியே ஜெபமாலை சொல்லுகிறவர்களை எந்தத் துர்ப்பாக்கியமும் மேற்கு கொள்ள மாட்டாது .அவர்களுக்குத் துர் மரணம் நேரிடாது.பாவத்திலிருப்பவர்கள் மனந்திரும்புவார்கள் . நல்லவர்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தில் வளர்ந்து நித்திய வாழ்வுக்கு தகதியுள்ளவர்களாவார்கள்.

7.உண்மையான அன்பு கொண்டு ஜெபமாலைச் செய்து வருகிறவர்கள் திருச்சபையின் கடைசி ஆறுதல்கள் இன்றியாவது தேவ இஷ்டப்பிரசாதமில்லாமலாவது மரணமடைய மாட்டார்கள்.

8.என்னுடைய ஜெபமாலையைச் செபித்து வருகிறவர்கள் தங்கள் வாழ்நாளிலும்,மரண நேரத்திலும் கடவுளின் வெளிச்சத்தைக் காண்பார்கள்.அவருடைய வரப்பிரசாத முழுமையைக் கண்டு கொள்வார்கள்.புனிதர்களுடைய பேறு பலன்களில் பங்கடைவார்கள்.

9.என் ஜெபமாலை மீது அன்புள்ள ஆன்மாக்களை வெகு துரிதமாக உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து மீட்டுக்கொள்வேன்.

10.என் ஜெபமாலையின் உண்மைப் புதல்வர்களாயிருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமையடைவார்கள்.

11.ஜெபமாலையின் வழியாக நீங்கள் கேட்பவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்.

12.என் ஜெபமாலைப் பக்தியைப் பரப்புகிறவர்கள் என் மூலமாக தங்கள் எல்லா அவசரங்களிலும் உதவி பெறுவார்கள்.

13.ஜெபமாலையைக் கைக்கொண்டுள்ள யாவரும் ,வாழ்விலும் மரணத்திலும்,பரலோக அர்ச்சிஷ்டவர்களை தங்கள் சகோதரர்களாக அடைந்து கொள்ளும்படியான வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து வாங்கியுள்ளேன்.

14.தினமும் தவறாமல் என் ஜெபமாலையைச் செபித்து வருகிறவர்கள் என் அன்புக் குழந்தைகளாயும் சேசுவின் சகோதரரும் சகோதரிகளுமாயிருப்பார்கள் .

15.என் ஜெபமாலைமேல் பக்திகொண்டிருப்பது மோட்சம் செல்வதற்க்கு ஒர் பெரிய உறுதிப்பாடாகும்.

ஜெபமாலை செபிப்பவர்கள் பகத்தியுடன் ஒரு நாள் விடாமல் தொடர்ந்து செபியுங்கள் சொல்ல முடியாமல் போவதற்க்கான தடைகளைத் தகர்த்தெரியுங்கள் என்றொரு நாள் நாம்மால் ஜெபமாலை சொல்லமுடியவில்லையோ அன்று நம் உயிர் பிரிந்ததென்று அர்த்தம்,என்ற உறுதியான எண்ணத்தோடு தொடருங்கள்.

ஜெபமாலை சொல்லாதவர்கள் அன்னையின் வாக்குறுதிகளை தியானித்து தயவு செய்து பக்தியுடன்  சொல்ல துவங்குங்கள் அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளுங்கள்.

மண்ணுலக வாழ்வில் ஜெபமாலையை கையிலெடுத்து செபியுங்கள் ,
விண்ணுலக வாழ்வை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

இயேசேவிற்க்கே புகழ் !

அன்னை மரியே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!