இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 30/08/2019
1 பேதுரு 5:8
அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
சூரியன் மறைவால் இருள் படர்வது போல் இறைவனை விட்டு விலகி வெகுதூரம் செல்லும்போது இறைவனுக்கு எதிரான சக்திகள் ,எதிர்மறை எண்ணங்கள் ,தீயசக்திகள் இறைவனை பழிவாங்க அவரது அன்பின் படைப்பான அவரது சாயலான மனிதர்களை(நம்மை) அடிமைப்படுத்தி இறைவனுக்கு எதிர் அணியில் நம்மை அறியாமலையே நிற்க்கவைத்து கொடுமைப்படுத்துகிறது.இதிலிருந்து வெளிவர நாம் யாருடைய கட்டுபாட்டில் இருக்கிறோம் என்பதை சுயபிரிசோதனை செய்வது அவசியம்.தினமும் 24 மணிநேரத்தில் இறைவனை நினைத்து எத்தனை மணிநேரம்/நிமிடங்கள் மனதில் நினைத்து தியானிக்கிறோம்? இறைவனை பக்தியுடன் வழிபட வாரத்தில் ஒரு முறையாவது ஆலயம் செல்கிறோமா? இறைவன் பிள்ளைகளான மற்ற மனிதர்களை மன நோக செய்யாமல் அன்பு செய்கிறோமா? 3 இல்லை பதிலென்றால் நீங்கள் இறைவன் உள்ளங்கையினில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
Comments
Post a Comment