இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 10/08/2019
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28(1-2)1
உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
என்று நாம் இறைவனை உணர்ந்து,அவரை முன்னிலைபடுத்தி,அவரது விருப்பப்படி வாழ்கிறோமோ அதற்க்கு கைமாறாக இறைவன் தான் படைத்த உன்னத படைப்பான மனிதர்களுக்கு இறைஆசீர் வழங்குகின்றார்.என்று நாம் இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்கின்றோமோ, அன்று முதல் நாம் வாழும் வாழ்க்கையே மாறிவிடும்
எதற்க்காக மனிதனாக வாழ்கிறோம் ? எதை நோக்கி வாழ்க்கையை பயணிக்கிறோம் எனபதற்க்கான தெளிவான புரிதல் கிடைக்கும். இறைவனுக்கு கீழ்படிந்து மனித வாழ்வை சுலபமாக வெல்வோம்.
Comments
Post a Comment