புனிதர்களின் பொன்மொழிகள்
துன்பங்களின் மத்தியில் கடவுளில் தன் முழு நம்பிக்கையையும் வைப்பவனைக் கடவுள் அன்போடு கண்காணிக்கிறார்,ஒவ்வொரு ஆபத்தில் இருந்தும் அவனைக் காக்கிறார்.தமது பாதுகாப்பில் இளைப்பாறும் ஆன்மாக்கள் மீது கடவுள் கொண்டுள்ள சிநேகம் அளவற்றதாக இருக்கிறது.நம்மை நம்பாதிருப்பதும்,கடவுளில் நம்பிக்கை வைப்பதும் தராசின் இரு தட்டுகளை போன்றவை .ஒன்று உயரும்போது மற்றது தானாகவே தாழ்கிறது...நம் சொந்த பலத்தில் நாம் நம்பிக்கை வைக்காத போது நம் நம்பிக்கை கடவுளையே தனது மையமாகக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.
அர்ச்.பிரான்சிஸ் சலேசியார்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment