இறைவனின் இறைவார்த்தைகள் 31/07/2019
நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91-14
அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,அவர்களைப் பாதுகாப்பேன்;
ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடன் கொண்டுள்ள அன்பினால் ,சாமாதானமும் நல்லுறவும் பெற்று மகிழந்து வாழ முடியும் போது அதே மனிதன் இறைவனிடம் அன்பு செலுத்தும் போது அளவிடமுடியாத வரங்களை இறைவனிடமிருந்து பெறுகிறான்.
கணவன்/மனைவி/குழந்தைகள் ஒருவருக்கொருவர் சுயநலமற்ற அன்பை கொடுக்கும் பொது ஒற்றுமையுடன் சமுதாயத்திற்க்கு முன்மாதிரியான குடும்பமாக வாழ்கின்றனர்,இதே அன்பை அன்பாய் இருக்கும் இறைவனிடம் கொடுக்கும்போது இறைவனையே மகிழவைக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
Comments
Post a Comment