இறைவனின் இறைவார்த்தைகள் 21/07/2019
சபை உரையாளர் 12:1
உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. "வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.
நண்பர்களே ! இறைவனின் மகிமையை பலர் அறிந்து உணர்திருந்தாலும் மனம் திரும்பி அவரிடம் செல்ல அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ, காலம் தாழத்துவது இயலபாகிவிட்டது. நாளை பார்த்துக்கொள்ளலாம்,இப்போது என்ன அவசரம்,நம் கடமைகளை முடித்து retirement ஆனதும் இறைவா இறைவா என முழு இறை வாழ்வு அப்போது வாழ்ந்தால் போதும் என்ற எண்ணங்கள் தவறு.இன்றே, இப்போதே ,இளமையிலே மனம்திரும்புங்கள் அவர் கைகளை பிடித்துக்கொள்ளுங்கள்.துன்பங்களை தீர்ப்பதற்க்காகவும்/வேண்டுதல்களை கேட்கவும் மட்டுமே இறைவனை எதிர்பார்த்து விரதங்களும்,பக்தி முயற்ச்சிகளும் செய்து சராசரி மனிதனாக வாழாமல் ,ஒவ்வொரு நாளையும் ஒவ்வோரு செயலையும் அவரையே நினைத்து அவருக்காக வாழ்வோம்?இறைஆசீர் பெறுவோம்.
Comments
Post a Comment