இறைவனின் இறைவார்த்தைகள் 19/07/2019
இணைச் சட்டம் 30:19
இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.
நண்பர்களே! கடவுள் நமக்கு நன்மை/தீமை,நீர்/நெருப்பு ,ஆசீர்/சாபம் என பல விருப்பங்களை(options) தந்து நாம் அதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நம்மிடமே அளித்தார் நாம் எதை தேர்ந்தேடுக்கின்றோமோ அதன் படியே நமது வாழ்க்கை அமைகிறது.நிலையற்ற உலக சார்ந்த வாழ்க்கை வாழும்போது உலக ஆசைகள் நிறைவேறுகின்றது நிலையான இறைவாழ்வு
தோற்றுபோகிறது.நிலையான ஆன்மா சார்ந்த வாழ்க்கை வாழும்போது இறை ஆசை நிறைவேறுகிறது உலக ஆசைகள் தோற்றுப் போகின்றது.
Comments
Post a Comment