இறைவனின் இறைவார்த்தைகள் 15/07/2019
எசாயா 49-15
பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ?
கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது
இரக்கம் காட்டாதிருப்பாளோ?
இவர்கள் மறந்திடினும்,
நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
நண்பர்களே ! உலகிலே மிக உண்மையான , மாசற்ற உறவு ,பால் குடிக்கும் குழந்தை,தாய் இருவரின் உறவே.
பெண்மைக்கு அங்கீகாரமாகவும் தாய்மைக்கு அர்த்தமாகவும்,குடும்பத்திற்க்கு வாரிசாகவும் இறைவன் ஆசீர்வாதத்தால் தாய்மார்களுக்கு கிடைத்த குழந்தைகள் பரம்பரை விதைகளே.இந்த உறவையே கொச்சைப்படுத்தி குழந்தைகளை கருவிலே களைப்பதும், அனாதை ஆசிரமங்களில் தவிக்கவிட்டுச்சென்று தாய்மை செத்துப்போனாலும் ,தாயின் அன்பு ,இரக்கம் இல்லாமல் ஊருக்காக தாயுடன் வாழ்ந்து தாய் இருந்தும் அனாதைகளாக வாழும் பிள்ளைகள். இறைவன் இக்குழந்தைகளை மறக்கவும் இல்லை, கைவிடுவதுமில்லை. மாதா,பிதா,குரு,தெய்வம் என இறைவனுக்கு மேலாக தாய்க்கு முன்னிலை தந்தாலும் இறைவனுக்கு நிகர் இறைவனே.
Comments
Post a Comment