இறைவனின் இறைவார்த்தைகள் 14/07/2019
இணைச்சட்டம்(24-19)
உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
பெண்களே ! சமுதாயத்தில் மதிப்போடு வாழ்பவரே.உங்களுக்கு திறனை கொடுத்த இறைவன் உங்களையும் உங்கள் குடும்பங்களை மட்டும் முன்னேற்ற அல்ல உங்களுடன் வாழும் கைம்பெண்கள்,விவாகரத்தான பெண்கள், கைவிடபட்ட பெண்களுக்கு உதவ முன்னுரிமை தந்து அவர்களுக்கு ஆதரவளியுங்கள்,ஆறுதலான வார்த்தைகளால் மனகாயத்திற்கு மருந்து போடுங்கள் அவர்களின் குழந்தைளின் கல்விக்கு உதவவும் முன்வாருங்கள்.ஆண்களே! உங்கள் பெண் குந்தைகள்,மனைவி செய்யபோகும் இந்த புண்ணிய செயலுக்கு பக்கபலமாக இருங்கள். இறை செயலும் இதுவே ,இறைவனை மகிழவைக்கின்ற செயலும் இதுவே.
Comments
Post a Comment