இறைவனின் இறைவார்த்தைகள் 13/07/2019
மத்தேயு 10(32-33)
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.
நண்பர்களே! இறைவனை தினமும் நம் கண்களால் கணலாம் , எப்போது நினைத்தாலும் அவருடன் நேரில் பேசலாம் ,அவர் நம்மோடு வாழ்ந்து நமது நன்மை, தீமைகளை பார்த்து கொண்டிருக்கிறார், அவர் ஆட்சி அதிகாரத்தோடு நம்மை மண்ணுலகில் மனிதர் உருவில் ஆளுகிறார் என வைத்துக்கொள்ளவோம் ( கற்பனைக்காக) தினமும் அவரை பார்த்து அவருக்கு மரியாதை தருவீர்கள் வணங்குவீர்கள் கடவுளே ஆட்சி அதிகாரத்தோடு இருக்கிறார் என்ற எண்ணத்தில் தீமை செய்யாமல் நன்மையே செய்து ஒழுக்கமான வாழ்க்கை வாழுவோம் ஆனால் கடவுள் தான் ஆட்சி அதிகாரத்தோடு இருக்கும் போது தரும் மரியாதையும் நற்குணங்களையும் விரும்பவில்லை .கடவுளை காணமலே அவர் எங்கும் இருக்கிறார் என்று மனதில் உறுதிகொண்டு ஏதுமற்ற ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பதையே விரும்புகிறார்.
Comments
Post a Comment