இறைவனின் இறைவார்த்தைகள் 12/07/2019
நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றும் வரை உன்னை கை விட மாட்டேன் (தொடக்க நூல் 28.15)
அன்பு நண்பர்களே !
இறைவன் நம் தலையில் என்ன தான் எழுதியிருக்கார்னே தெரியலையே என்று கேட்பவர்களே,இறைவனின் திட்டங்களை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.என்று சொன்னால் மட்டும் புரிந்துவிடாது . அகில பிரபஞ்சத்தையே படைத்தவர்,சூரியன்,சந்திரன் என நம்மால் பார்த்து வியக்ககூடிய படைப்புகளின் சிறந்த படைப்பாளி ஒவ்வொரு படைப்புமே அவர் படைத்தால் புனிதம் அடைந்தன.தன் சாயலாக உலகை ஆள படைக்கபட்ட மனிதனின் படைப்பு கற்பனை திறனுக்கு அப்பாற்பட்டது.படைத்தவர் படைப்பின் நோக்கத்தை நிச்சயம் மனிதர்களுக்கு ஒருநாள் உணர்த்துவார்.நாம் படைப்பின் உச்சமாகவே மனிதர்களாக படைக்கப்பட்டோம் அதை உணராததாலே அவருடன் இணைந்து வாழாமல் எதிர்த்து நின்று கொண்டிருக்கிறோம்.ஆனால் அவர் படைப்பின் நோக்கத்தை உணர்த்தும் வரை நம் கைகளை விடுவதில்லை.
Comments
Post a Comment