இறைவனின் இறைவார்த்தைகள் 09/07/2019
அன்பு நண்பர்களே ! . மூதாதையர்களின் வழிகாட்டுதலின் படியே நமது மதமும் ,கலாச்சாரமும் ,வாழ்க்கை முறையும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே ,கடவுளும் ஒருவரே அதை உறுதி படுத்தவே கடவுள் மனிதனை தனது சாயலாக படைத்தார்.நமது வாழ்வை வேறுபாடோடு வாழ்ந்தாலும் ,பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தினாலும் கடவுள் நம் அனைவரையும் தன் குழந்தைகளாகவே வளர்க்கிறார் .கடவுள் சாயலாக இருக்கும் மனிதன் தெரியாத மனிதர்களை நேசிக்கவில்லை என்றாலும் ,தெரிந்த மனிதர்களை வெறுத்து அறுத்து விட தயங்கவில்லை.கடவுள் குணம் உள்ளவர்கள் மனிதனை கடவுளாக மதிக்கிறார்கள்.இல்லாதவர்கள் மனிதனை மிருகமாக மிதிக்கிறார்கள்.மனிதா நீ மாற வேண்டும் ஒவ்வொரு மனிதனும் உன் நண்பன் ஒவ்வோரு மனிதனும் உன் சகோதரன்.உன் உறவில் வரும் சின்ன பிரச்சனை இதயத்தை பிளக்கும் பூகம்பமாக மாறினாலும் உறவிற்க்காக விட்டுக்கொடுத்து போனால் உன் தலைமுறையே ஒற்றுமையோடு வாழும்.
Comments
Post a Comment