இறைவனின் இறைவார்த்தைகள் 07/07/2019
எரேமியா 32-16
அழுகையோடு அவர்கள்
திரும்பி வருவார்கள்;
ஆறுதலளித்து⁕ அவர்களை
நான் அழைத்து வருவேன்;
நீரோடைகள் ஓரமாக அவர்களை
நான் நடத்திச் செல்வேன்;
இடறிவிழாதவாறு சீரான வழியில்
அவர்கள் நடக்கச் செய்வேன்
நண்பர்களே! வாழும் நாட்கள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் மனம்திரும்பி இறைவனிடம் செல்லும் நாள் வரும்.அப்போது நம் இறைவன் நம் தவறுகளை மன்னித்து முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்.நமது கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்துகிறார்.இனி வாழும் நாள்களில் தீய வழியில் தடம் மாறாமல் நல்வழியிலே நடத்தி செல்கிறார்.மனம் மாற்றம் என்பது மனித குணம். இறைவனுக்காக ஏற்படும் மனமாற்றம் இறைவனின் குணம்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment