*எண்ணற்ற பாவிகளை மனமாற்ற உதவிய குழந்தை தெரெசம்மாளின் சிறு சிறு ஒறுத்தல் முயற்சிகள்* இயேசுவுக்குப் பிரியமுடன் வாழவும் ஆத்துமங்களை இரட்சிக்கவும் குழந்தை தெரசம்மாளுக்கு அளவு கடந்த ஆசை. இதற்காக பல ஒறுத்தல் முயற்சிகளையும் புண்ணிய முயற்சிகளையும் செய்தார்கள்.இவைகளை ரோஜா மலர்களாகப் பாவித்து சிலுவையில் தொங்கும் இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிரான்சினி என்ற ஒரு பெரிய கொலைக்காரனைப் பற்றி, தெரெசம்மாள் பத்திரிகையில் வாசித்தார் அவன் அநேக கொலைகள் செய்திருந்தான். அதனால் அவனுக்கு மரணதண்டனை விதித்தார்கள். சில நாட்களில் அவன் தூக்கில் மரணமடையவிருந்தான். அவனை மனந்திருப்ப பல குருக்கள் முயன்றார்கள். அவனது ஆன்மாவைப் பற்றியும் நரகத்தைப்பற்றியும், இயேசுவைப் பற்றியும் அவர்கள் அவனிடம் பேசினார்கள். ஆனால், அவன் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவர்களது முகத்தைப் பார்க்கக்கூட மறுத்துவிட்டான். தெரெசம்மாள் இவன் மனந்திரும்ப செபிக்க ஆரம்பித்தாள்; ஒறுத்தல் முயற்சிகளும் பல செய்தாள். "*இயேசுவே நீர் அவனை மன்னித்து நரகத் தீயிலிருந்து நிச்சயம் காப்பாற்றுவீர்.* நான் முதன் முதலாக மிட்க விரும்பும் பாவி இவன். ம...