Posts

Showing posts from November, 2020

தப்பறைகள் சத்தியம் போல அலங்கரிக்கப்படுறது .புனித இரேனியுஸ்

 உண்மையில் தப்பறை என்பது அதன் அப்பட்டமான உருக்குலைந்த தோற்றத்தில் மனிதர் கண்முன்பாக ஸ்தாபிக்கப்படுவதில்லை.அப்படி ஸ்தாபிக்கப்பட்டால்,அது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.மாறாக அது ஒரு கவர்ச்சியான உடையால் தந்திரமான விதத்தில் அலங்கரிக்கப்படுகிறது.இதன் காரணமாக,தன் வெளித்தோற்றம் அனுபவமில்லாதவர்களை கவரக் கூடியதாக இருக்கிறது.*சத்தியத்தை விட அதிக உண்மையானதை போல அது தோன்றுகிறது*!அலட்சியத்தின் காரணமாக ஆடுகள் ஓநாய்களால் தூக்கிச் செல்லப்படுவது போல ,சிலர் இந்த மனிதர்களின் உண்மையான குணத்தை அறியாதவர்களாய் ,அவர்களால் தூக்கிச் செல்லபட்டு விடலாம். புனித இரேனியுஸ்  from the book of Adversus Haereses.

ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.

Image
  நற்செய்தி வாசகம்  லூக்கா 16 (1-8)ஆம் அதிகாரம்  *உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களுக்கான உவமை . * நவம்பர் மாதம் முழுவதும் திருச்சபை கத்தோலிக்கர்களை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக முன்மதியோடு  செபித்து  ஆண்டவரின் பாராட்டை பெற அழைக்கிறது. வீட்டின் உரிமையாளர்- இறைவன் நேர்மையற்ற வீட்டு பொறுப்பாளர்- நாம். கடன் பட்டவர்கள் - உத்தரித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள். பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படைத்தல்-மண்ணுலக பாவ புண்ணிய கணக்கை இறைவனிடம் ஒப்படைத்தல்.தீர்வின் நாள். மண்ணுலகில் வாழும் நாம் நமது இறப்பிற்கு முன், உத்தரிக்கும் ஆன்மாக்களின் தண்டனை காலத்தை குறைக்க முடியும். ( உதாரணமாக ஒரு ஆன்மாவின் அல்லது இறந்த நமது தாய் தந்தையரின்  உத்தரிக்கும் 500 ஆண்டுகள் வேதனையை நமது  திருப்பலியாலும்,செபமாலை யாலும்,தர்மத்தாலும்,ஒறுத்தல் முயற்சிகளாலும் 400ஆண்டுளாக குறைத்தால்) நாம் முன்மதியோடு செயல்பட்டவர்களாவோம். உத்தரிக்கும் ஆன்மாக்களின்  வேதனை காலத்தை  குறைக்கவும் ,மாற்றி எழுதும் வல்லமை, நேர்மையற்ற வீட்டு பொறுப்பாளராகிய நம்மிடமே நமதாண்டவர் வழங்கியுள்ளார். *கடனை குறைப்பதால் வீட்டு உ...