புனிதரைப் பற்றி தூய புல்ஜென்சியஸ் “தூய ஸ்தேவான் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருந்தவர் ஆவார். அவர் கடவுள் மீது கொண்ட அன்பினால் அவருக்காகத் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். மனிதர்கள்மீது கொண்ட அன்பினால் தன்னைத் துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார். அன்புதான் தூய ஸ்தேவானின் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தது”. இன்று நாம் திருச்சபையின் முதல் மறைசாட்சியான தூய ஸ்தேவானின் விழாவைக் கொண்டாடுகின்றோம். நேற்று கிறிஸ்துவின் பிறப்புவிழாவைக் கொண்டாடி விட்டு, இன்று ஒரு மறைசாட்சியின் விழாவைக் கொண்டாடுவது பொருத்தமானதாக இருக்குமா? என நாம் நினைக்கலாம். ஆனால் கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் என்றைக்கு இந்த மண்ணில் தளைத்தோங்கத் தொடங்கியதோ, அன்றைக்கே கிறிஸ்தவத்திற்கு எதிராக பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது என்பதைக் குறித்துக் காட்டுவதற்காகவோ என்னவோ, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு அடுத்த நாளில் தூய ஸ்தேவானின் மறைசாட்சிய விழாவைக் கொண்டாடுகின்றோம். வாழ்க்கை வரலாறு ஸ்தேவான் அல்லது முடியப்பர் எருசலேமில் பிறந்தவர், கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்றவர்; கிரேக்க மொழி பேசும் புறவினத்துக் கிறிஸ்தவர்....