ஏன் கடவுள், மனிதன் ஆனார்? -3
கடவுள், மனிதர்களை பொய் சொல்லாதே,கொலை செய்யாதே, திருடாதே,மோகம் பாவம் செய்யாதே என்று பல்வேறு கட்டளைகளை தந்து அதன்படியே மனிதர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என வெறும் கட்டளைகளை தருகின்ற சர்வாதிகார கடவுளாக இல்லமால் , ஏழைக்குடும்பத்தில் சாதாரண மனிதனாக கன்னி மரியாயிடம், பரிசுத்த ஆவியினால் பிறந்து வறுமையிலும், இளமையிலும்,கல்வாரி பாடுகளிலும் எந்த பாவமும் செய்யாமல் 33 ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து, தனது உயிரையே பலியாகத்தந்து ஒட்டு மொத்த மனுகுலத்தையும் பாவத்திலிருந்து மீட்டார் இயேசு.வாழும்போது மனிதர்கள் ஒவ்வொவரும் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நம் மரணத்திற்கு பிறகு மோட்சம் அல்லது நரகம் என்கிற தீர்ப்பை வழங்குகின்ற அதிகாரத்தை, பரிசுத்தமாக வாழ்ந்த மனித அவதாரத்தினாலேயே, நீதி தவறாத தந்தையாம் கடவுளிடமிருந்து பெற்றார் இயேசு.